“டீல் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

டீல் ரணில் – ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் இல்லை ! திருடப்பட்ட பணத்தை கொடுங்கள் ! பொருட்களின் விலை – வரிச்சுமை தாங்க முடியாது ! வாழ நிவாரணம் கொடு! 

3 ஆண்டுகளாக மூடப்படடுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும்  அடக்குமுறையை நிறுத்துங்கள் கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுதலை செய்! எதிர்வரும் மக்கள் வெற்றிக்காக மக்கள் பேரவையை கட்டியெழுப்புவோம்! ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்