டி20 பேட்டிங் தரவரிசை: இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இடத்தை பிடித்தார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் 16 வயதே ஆன இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 15 பந்தில் 29 ரன்கள் விளாசினார். வங்காளதேசம் அணிக்கெதிராக 17 பந்தில் 39 ரன்கள் குவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக 34 பந்தில் 46 ரன்களும், இலங்கைக்கு எதிராக 34 பந்தில் 47 ரன்களும் விளாசினார்.

இதனால் 19 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுஜி பேட்ஸ் 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பெத் மூனே 3-வது இடத்திலும், ஷோபி டெவைன் 4-வது இடத்திலும், மெக் லானிங் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரண்டு இடங்கள் சரிந்து 6-வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் சரிந்து 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

முகநூலில் நாம்