டிவி சானல் பிரபலம் பிரியங்காவின் அடுத்த அதிரடி! நடிகரின் மனைவி இங்கேயும் வந்துட்டாங்களா

டிவி சானலில் தற்போது கலக்கி வருபவர் பிரியங்கா. பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மனைவி இவர் என பலருக்கும் தெரிந்திருக்கும். காமெடி, நடனம் என பிரியங்கா கலக்கி வருகிறார்.

இவர் தற்போது கன்னி மாடம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் மெட்டி ஒலி சீரியல் புகழ் போஸ் வெங்கட் ஹீரோவாக நடித்துள்ளார்.

நடிக்க வருமுன் அவர் ஆட்டோ டிரைவராக இருந்தவர். சினிமாவிலும் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாயா தேவி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி ஆக்யோரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் மூலம் சினிமாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்