டிக் டாக், சீனாவின் மிகப்பெரிய உளவு சாதனம்: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சீனாவால் தொடங்கப்பட்ட டிக்டாக், வீசாட் போன்ற செயலிகள் குறித்து டிரம்ப் நிர்வாகம் தீவிர கண்ணோட்டத்துடன் அணுகி வருகிறது. இந்தியா ஏற்கனவே இவற்றை தடை செய்துள்ளது. அதுபோல், அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தடை செய்து விட்டால், சீன கம்யூனிஸ்டு கட்சி தனது மிகப்பெரிய உளவு மற்றும் கண்காணிப்பு சாதனத்தை இழந்து விடும்.

டிக்டாக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்கள், பெற்றோர், உறவினர்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை திரட்டப்பட்டு, சீனாவில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டருக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. பயோ மெட்ரிக் பதிவுகளையும் சீனா பெற்றுவிடும். எனவே, யாரிடம் பயோ மெட்ரிக் விவரங்களை கொடுக்கிறோம் என்பதில் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் நாம்