ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு..

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ´ஜெயிலர்´. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே நடிக்கு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலாவி வந்தன.

இந்நிலையில் ‘ஜெயிலர்´ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்