ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ வீரர்களுக்கு எதிரான தடைவிதிப்புத் தொடர்பில் தீவிரமாக ஆராய்கிறது பிரிட்டன்

முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல்
சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும், ஏனைய இராணுவ வீரர்களுக்கு எதிராகவும்
தடைகளை விதிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் அரசாங்கம்
ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி
தொடர்பான அமைச்சர் ஜெஸி நோர்மனை மேற்கோள்காட்டி ‘த ஐலன்ட்’ பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர்
நடைபெற்றுவரும் நிலையில், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல்
விவகாரம் உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை தமது அரசாங்கம் மிக
உன்னிப்பாக மதிப்பாய்வு செய்துவருவதாகவும், அதன்படி ‘தடைவிதிப்பு’
உள்ளடங்கலாகத் தம்வசமுள்ள இராஜதந்திர உத்திகளை எவ்வாறு
பிரயோகிக்கமுடியும் என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும்
அமைச்சர் ஜெஸி நோர்மன் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகைச் செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்