
எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிக்குள் 7000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை தவிர, 25,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு மிகப்பெரிய கப்பலொன்று ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்குள் மாலைத்தீவு கடற்பரப்பை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.
அந்த கப்பலிலிருந்து ஏனைய சிறிய கப்பல்களுக்கு எரிவாயு மாற்றப்பட்டு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஓமனிலிருந்து கொண்டுவரப்படவுள்ள இந்த எரிவாயுவிற்கான ஆரம்ப கட்டணம் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
குறித்த கப்பல் வந்தடைந்த பின்னர் நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு அமைய, சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சுட்டிக்காட்டினார்.