ஜூன் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை!

ஜுன் மாதம் 4 ஆம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இன்று மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  

கடந்த முதலாம் திகதி முதல் நாளைவரை இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படுகிறது.   எதிர்வரும், 4ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.   6ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் முன்னர் போன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்