
எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரச நிறுவனங்களை நடத்தும் முறைமை தொடர்பான விடயங்களை பொது நிர்வாக அமைச்சினூடாக சுற்றறிக்கை அனுப்பி தௌிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு, எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு திருப்பும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.
பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உரிய முறைமை தொடர்பில் தீர்மானித்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.