ஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி!

ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளிம் ஏற்பட்டது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகளில் நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 16 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்