ஜப்பானின் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுகா தேர்வு!

யோஷிஹைட் சுகா ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

தற்போது ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளராகவுள்ள சுகா, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆகிய இரு போட்டியாளர்களுக்கு எதிராக மொத்தம் 534 வாக்குகளில் 377 வாக்குகளைப் பெற்றார்.

லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பெரும்பான்மையை கருத்திற் கொண்டு சுகா புதன்கிழமை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜப்பானின் அடுத்த பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு சக்திவாய்ந்த அரசாங்க ஆலோசகரும் செய்தித் தொடர்பாளருமான 71 வயதான சுகா உறுதியனா, ஸ்திரத்தன்மையான மற்றும் அபேயின் கொள்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வார் என்றும் கூறுப்படுகிறது.

65 வயதான ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் மாதம் பதவி விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்