
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, அரச பல்கலைக்கழகங்களில் ஈ-கற்கை (e-learning) முறைமையின் கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக இணைய வசதிகளை இலவசமாக வழங்குமாறு ஜனாதிபதி தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறித்த மாணவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சித்திட்டத்தினை நாளை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை மட்டுமே இந்த இலவச இணையச் சேவை அமுலில் இருக்கும்.