
“கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது புராணய, ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மாஹிமி´ ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (17) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச மகாநாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழ், டபிள்யூ.ஏ. பத்மின் சமீர இந்த நூலை தொகுத்துள்ளார்.
விழாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மகாநாயக்க தேரரின் புகைப்படத்திற்கு. மலரஞ்சலி செலுத்தினார்.
சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு நூலை வழங்கி வைத்தார். ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.
வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மகா விகாரையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.