
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான நுழைவாயிலைக் கடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதன்போது ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோடு விசேட அதிரடிபடையினரின் படைவீரர்களும், இராணுவ வீரர்கள் பலரும் தமது பாதுகாப்பு கடமையில் இருந்து பின்வாங்கி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழிவிட்டு அகன்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜனாதிபதி பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீற்றத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதை தடுப்பதற்காக படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் அவை குறிப்பிட்டுள்ளன.