ஜனாதிபதி செயலக சொத்துக்கள் சேதம் ; மேலும் 9 பேர் கைது

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள்
அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 9 பேர்
கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேலும் 9 பேர் இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 22,23,24,25,28 மற்றும் 43 வயதுகளுக்கு
இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் நிகதலுபொத, குருநாகல்,கொனகம மற்றும்
கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்