ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக்க வேண்டும் என்று கட்சி தலைவர்கள் ஏகமனதாக  தீர்மானம்

அவசரமாக கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்