ஜனாதிபதி கோட்டாபயவின் கடுமையான உத்தரவு

ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற பக்கபலமாக இருந்தவர்கள் மோசடிக்காரர்களாக இருந்தால் ஒருபோதும் பதவி வழங்க மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ கடுமையாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு உதவினார்கள் என்பதற்காக பாரபட்சம் பார்க்க முடியாது. எனது கொள்கைகளை ஏற்றுக் கொண்ட படித்தவர்களை பதவியில் நியமிப்பேன். எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படுவதும் இல்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்