ஜனாதிபதி கோட்டபாயவின் உத்தரவு! சாரதி அனுமதி பத்திரம் பெறுவதில் புதிய நடைமுறை

சாரதி அனுமதி பத்திரத்திற்கு அவசியமான வைத்திய பரிசோதனைக்கான தினம் மற்றும் நேரம் நாளை முதல் இணையத்தில் நேரடியாக பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்கானதிகதி, நேரம் போன்றவை ஒன்லைன் முறையில் இணையத்திலேயே வெளியிடப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் இந்த வசதியை தேசிய போக்குவரத்து மருத்துவநிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த இணையத்தளத்தின் முகவரி www.ntmi.lk இந்த இணையத்தளம் நாளை முதல் இயங்க ஆரம்பிக்கும்.

கையடக்க தொலைபேசிகளில் இதற்கான விசேட செயலி ஒன்றும் அடுத்த வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும். இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பதாரியின் விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மருத்துவபரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் வெளியிடப்படும்.

முகநூலில் நாம்