ஜனாதிபதி இன்று எகிப்து செல்கிறார்

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (27th Conference of the Parties of the
UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று
(06) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.

எகிப்தின் Sharm El-Sheikh-இல் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு
எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.இதேவேளை,
200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பிரதான நாடுகளின் தலைவர்கள் காலநிலை
மாற்றம் தொடர்பான யுக்திகள் குறித்து விவாதிப்பார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்