ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட பாராளுமன்றம் கூடவுள்ளது 

பாராளுமன்றம் இன்று (16) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

இதன்படி ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்