ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டனத்தை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது முறை­யல்ல – ரணில்

ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டன உரையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது முறை­யல்ல என ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார். 

பொரு­ளா­தாரம் மற்றும் மக்­களின் வாழ்­வா­தாரம் போன்ற தேசிய பிரச்­சி­னைகள் குறித்து அர­சாங்­கத்­திடம் கேள்­வி­யெ­ழுப்­பப்­பட வேண்­டி­யது அவ­சியம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். 

கொழும்பு – 3, 5ஆவது ஒழுங்­கையில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இல்­லத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை முற்­பகல் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது மக்கள் வழங்­கிய ஆணைக்கு மதிப்­ப­ளித்தே அர­சாங்­கத்தை ஜனா­தி­பதி கோத்த­பா­ய­விடம் வழங்­கி­யுள்ளோம். பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பா­ன்மை எம்­மி­டமே உள்­ளது. எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் மீது தொடர் அடக்­கு­மு­றை­களும் பழி­வாங்­கல்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­மே­யானால் ஜனா­தி­ப­தியின் இன்­றைய தின கொள்கைப் பிர­க­டன உரையை சவா­லுக்கு உட்­ப­டுத்தி வாக்­கெ­டுப்பில் தோல்­வி­ய­டையச் செய்ய வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜே.சி. அல­வ­து­வல குறிப்­பிட்­டுள்ளார். 

ஆனால் அவ்­வாறு ஜனா­தி­ப­தியின் உரையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது முறை­யல்ல. 1977ஆம் ஆண்­டுக்குப் பின்னர் அவ்­வாறு இடம்­பெற்­ற­தில்லை. பிர­த­ம­ருக்­கா­கவே அன்று  சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க சிம்­மா­சன உரையை நிகழ்த்­தினார். எனவே ஜனா­தி­ப­தியின் உரையை சவா­லுக்கு உட்­ப­டுத்­து­வது முறை­யல்ல. இலங்­கையின் பொரு­ளா­தாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு உட்­பட சர்­வ­தேச விட­யங்கள் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் கேள்­விகள் எழுப்­பலாம் என ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

ஏப்ரல் இறு­தியில் பொதுத்­தேர்­தலை நடத்­து­வது குறித்து ஆளும் கட்­சிக்குள் இரு­ வே­று­பட்ட கருத்­துகள் காணப்­ப­டு­வ­தாக நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.கே. பிய­தாச இதன் போது குறிப்­பிட்டார். அமைச்சர் மஹிந்த அம­ர­வீர போன்­ற­வர்கள் விரைவில் பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்­த­லுக்குச் செல்ல வேண்டும் என வலி­யு­றுத்தி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார். 

எவ்­வா­றா­யினும் தீர்­மானம் நிறை­வேற்றி அர­சாங்­கத்தைக் கைப்­பற்­று­வதோ, விரை­வாக தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிப்­பதோ தற்­போது உகந்­த­தல்ல என்­பதே அர­சியல் ஆய்­வா­ளர்­களின் நிலைப்­பா­டாக உள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நவீன் திசா­நா­யக்க இதன் போது குறிப்­பிட்­டுள்ளார். 

அதே போன்று சம்பிக, ராஜித சேனாரத்ன மற்றும் சுவிஸ் தூதரக விவகாரங்களில் தவறான வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கம் சர்வதேசத்தில் தவறான பார்வைக்கு ஆளாகியுள்ளது. சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுடன் செயற்படும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்