ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நாடாளுமன்றம் அமைவது அவசியம்- பிரதமர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் முன்கொண்டு செல்லக்கூடிய கட்சி பலமிக்க தலைமைத்துவத்துடன் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லாவிட்டால், நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடனேயே தாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிட்டபன பகுதியில் இடம்பெற்ற தேர்ல் பிரசாரக் கூட்டத்தில் கல்நதுகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் வீட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தீர்வு ஐக்கிய தேசியக் கட்சியிடமே உள்ளது.

அரசாங்கம் கூறுவதுபோல நாட்டில் பொருளாதார பிரச்சினை கொரோனா காலத்தில் ஏற்படவில்லை என்றும், 2020 இல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த கொடுப்பனவை நிறுத்தியபோதே அந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டார்.

நுவரெலியா ராகலையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சுப்பையா சதாசிவம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முகநூலில் நாம்