
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்தின் கீழ் இருந்த பல நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, நிதி அமைச்சராக ஜனாதிபதியின் கீழ் இருந்த முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் துறைமுக நகர ஆணைக்குழு என்பன முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் நேற்று (16) வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், முதலீட்டு ஊக்குவிப்புக்காக அமைச்சர் எவரும் நியமிக்கப்படாததால், அந்த அமைச்சு தொடர்ந்தும் ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.