ஜனாதிபதித் தேர்தல்: ஜனநாயகக் கட்சி சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார்.

இதனடிப்படையில், நவம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.

நாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான, 1991 பிரதிநிதிகளைத் தாம் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பதிவினூடாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நெருக்கமான போட்டியாளராக விளங்கிய Bernie Sanders கடந்த ஏப்ரலில் விலகியதையடுத்து, ஜோ பைடனுக்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தன.

கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியன அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பாரிய தாக்கம் செலுத்தவுள்ள விடயங்களாக அமைந்துள்ளன.

முகநூலில் நாம்