
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும்
இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு
எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக டெலோ கட்சியின் தலைவர் நாடாளுமன்ற
உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தாம் முன்வைத்த 3 முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு
அரசாங்கம் ஒருவார கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல்
நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.