சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை!

மனித செயற்பாடுகள் காரணமாக சைபீரியாவில் கடும் வெப்ப காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி 38 பாகை செல்சியஸ் சைபீரியா – வர்கொயான்க்ஸ் நகரில் பதிவாகியுள்ளது.

மனித செயற்பாடுகள் தவிர்த்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இவ்வாறு கடும் வெப்ப காலநிலை நிலவும் என ஐக்கிய நாடுகள் காலைநிலை தொடர்பிலான பிரிவு தெரிவித்துள்ளது.

சைபீரியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 5 பாகை செல்ஸியசினால் வெப்ப காலநிலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தில் சாதாரண வெப்ப காலநிலையினை விட இரு மடங்கு வெப்ப நிலை அதிகரிகத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்