சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று கேலரிகளை திறக்க அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளையும் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் கேலரி பிரச்சினையை தீர்க்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவரை விடிவு கிடைத்தபாடில்லை. இந்நிலையில்தான் தற்போது அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்