செல்லாத பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கிய சசிகலா! சிக்கியது கடிதம்?

மதிப்பிழந்த பணத்தை பயன்படுத்தி சசிகலா சொத்துக்கள் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கி சிறையில் உள்ள சசிகலா, தனது கட்சி நடவடிக்கைகளை சிறையில் இருந்து கவனித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இந்நிலையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டபோது அந்த பணத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய்க்கு சொத்து சசிகலா வாங்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதாவது ரூ.1,674 கோடிக்கு சொத்து வாங்கியதாகவும், ரூ.237 கோடி கடன் வழங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலா இந்த பழைய நோட்டுகள் பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் குறித்து அவரது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாகவும். அது 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இளவரசியின் மகன் விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எடுக்கப்பட்டதாகவும். அதில், முழு விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால், சசிகலா சிறைவாசம் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும். அல்லது அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் நாம்