சூர்யா, வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படத்தின் கதை இதுதானா?

சுரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் இயக்குனர் வெற்றி மாறனோடு இணையவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.

முதன் முறையாக இணையும் இந்த கூட்டணியில் வரும் படத்தின் பெயர் வாடிவாசல் என்று சில தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது மறைந்த எழுத்தாளர் திரு சி.எஸ் செல்லப்பா அவர்கள் 1959ஆம் ஆண்டு வாடிவாசல் என்ற பெயரில் ஒரு குறுநாவல் ஒன்றை வெளியிட்டார். இந்த நாவலை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

முகநூலில் நாம்