சூர்யா, வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படமும் கைவிடப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் செய்தி- ரசிகர்கள் அதிர்ச்சி

சூர்யா, வெற்றிமாறன் இருவரும் இணையும் காம்போவிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அண்மையில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா, வெற்றிமாறன் இணையும் ‘வாடிவாசல்’ படமும் கைவிடப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூரியை வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி ஆரம்பித்தார் வெற்றிமாறன். இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப்படத்தை முடித்ததும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்திற்கான பணிகளை துவங்குவதில் மும்முரமாக இருந்தார் வெற்றிமாறன்.

இதனை தொடர்ந்து அண்மையில் ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்று வேறலெவலில் இணையத்தில் வைரலானது.

இதனிடையில் பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் அந்தப்படத்திலிருந்து சூர்யா விலகினார். இதனையடுத்து தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா 42’ படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டியில் சரித்திர படமாக 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்