சூர்யா பிறந்தநாளுக்கு செம்ம மாஸ் அப்டேட் வருகிறது, ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கும் ஒரு படம் என்றால் அது சூர்யாவின் சூரரை போற்று படம் தான்.

இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, பெண் இயக்குனர் சுதா கே. பிரசாத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தான் சற்று தள்ளிபோய் வுள்ளது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொது ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையாய்துள்ளார்.

இவர் இசையில் இப்படத்தில் உருவான சில பாடல்கள் வெளிவந்து யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்றது.

இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23 ஆம் தேதி அன்று சூரரை போற்று படத்தின் மிக முக்கியமான அப்டேட் ஒன்று வர இருக்கிறது என சர்ப்ரைஸாக கூறியுள்ளார்.

முகநூலில் நாம்