சூர்யாவின் சிறப்பு போஸ்டரை வெளியிடும் பிரபல கிரிக்கெட் வீரர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது. தன்னுடைய தனி திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சூர்யா.

நடிகர் சூர்யா தன்னுடைய பிறந்தநாளை ஜூலை 23ம் தேதி கொண்டாட இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னதாகவே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 115 பிரபலங்கள் இணைந்து காமன் டிபி என்னும் போஸ்டரை வெளியிட்டார்கள். இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், சூர்யாவின் சிறப்பு போஸ்டரை பிறந்தநாளான நாளை சிஎஸ்கே மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா வெளியிட இருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

முகநூலில் நாம்