சூரரைப் போற்று ரிலிஸ் தேதி இதுவா? ரசிகர்கள் வருத்தம்

சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் சூரரைப் போற்று படம் திரைக்கு எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் இப்படத்தின் டீசர் செம்ம ஹிட் அடித்துள்ளது.

வெளிவந்த சிங்கிள் ட்ராக் கூட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் சூரரைப் போற்று பட்ம ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக கூறினார்கள்.

அதாவது மாஸ்டர் படத்துடன் போட்டியாக வருவதாக இருந்தது, ஆனால், தற்போது படம் தள்ளி சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இதுக்குறித்து நேற்றே நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம், அதை தொடர்ந்து இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வரும் என கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது இந்த இரண்டு தேதியும் இல்லை, இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருகின்றது என சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இந்த தகவல் சூர்யா ரசிகர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அதோடு, அன்றைய தினம் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில நாட்களில் சூரரைப் போற்று படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் நாம்