
தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். உலகம் முழுக்க அவருக்கான பெரும் மக்கள் செல்வாக்கு இருக்கிறது.
சாதாரண பேருந்து ஓட்டுனராக இருந்து இன்று சினிமாவில் பெரும் உச்சம் அடைந்திருக்கும் அவரின் மீது இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது.
தர்பார் படத்தை தொடர்ந்து அவர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். 2021 சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அவரின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
தற்போது அவரின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்த நாள் இன்று. 39 ம் வருட திருமண கொண்டாட்டத்திற்காக பலரும் அந்த தம்பதிகளை வாழ்த்தி வருகிறார்கள்.