சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் கதைக்களம் இங்கு தானாம்

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் செய்த சாதனையை பல வருடங்கள் கழித்து தற்போது தான் விஜய், அஜித் மெல்ல உடைத்து வருகின்றனர்.

ஆனால், 70 வயதிலும் ரஜினிகாந்த் இன்னும் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றார், ஆம், தற்போது கூட சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்டதாம், இதில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்து வருகின்றாராம்.

தற்போது இப்படத்தின் கதைக்களம் பொள்ளாச்சியில் நடப்பது போல் உள்ளதாக ஒரு பிரபலம் கூறியுள்ளார்.

கண்டிப்பாக படம் செம்ம செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்து குடும்ப ரசிகர்களை கவரும்படி இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் நாம்