சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – ஈரான்

உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஒபாமா அமெரிக்க அதிபராக ஆட்சிசெய்த காலகட்டத்தில் ஈரானுடன் சிறந்த கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை இட்டார். இதன் மூலமாக அமெரிக்காவுக்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற காலம் தொடங்கியே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் மோதல்போக்கு நீடித்து வந்தது.

இதனை அடுத்து ஈரான் அரசுக்கு மிகவும் நெருக்கமான புரட்சிகர ராணுவப் படைத் தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனால் ஈரான் அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுலைமானி அந்நாட்டில் மிகவும் பிரபலமான ராணுவ வீரராக கருதப்பட்டவர். இவருக்கு ஈரான் ஆளும் கட்சியின் ஆதரவு அதிகம். சமீபத்தில் அமெரிக்க அரசு ஈரானுடன் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டது. இதனை அடுத்து ஈரான் டிரம்ப் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் அதிபர் காமேனிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் அடிக்கடி வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. குர்த் படைத் தளபதியாக இருந்த சுலைமானி பாக்தாத் அருகே கொல்லப்பட்டார். அமெரிக்கா தனது தேவை முடிந்தவுடன் தங்கள் சுயலாபத்துக்காக யாரை வேண்டுமானாலும் கொலை செய்து பின்னர் அவரை பயங்கரவாதி என அறிவிக்கும் என தனது தந்தையின் இறப்புக்குப் பின்னர் சுலைமானின் மகள் ஆவேசமாக தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா விரைவில் கடும் விளைவுகளைச் சந்திக்கும் என அவர் சுலைமானியின் இரங்கல் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் அமெரிக்க பெண் தூதர் லானா மார்க்ஸை கொல்ல ஈரான் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனை ஈரான் மறுத்து இருந்தது. இதுகுறித்து ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலாமி பேட்டி அளித்தபோது தாங்கள் அமெரிக்க தூதரை கொன்று பழி தீர்ப்பதாக இல்லை எனவும் அதற்கு மாறாக தங்கள் தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்க ராணுவத்தை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்