சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய பாரிய நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் பல வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இந்நிலையில், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டத்தின் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்துக்கு அமைவாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில், சுற்றுலா துறையை மேம்படுத்து வகையில் சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் தொடர்பாக அம்மாவட்டங்களில் உள்ள சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், விடுதிகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ், திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்,டு பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, கும்புறுமூலை, கல்குடாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (21) நடைபெற்றது.

உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டத்தின் உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எ.நவேஸ்வரன், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் குழுத்தலைவர் டேவிட் எப்லட், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான மாவட்ட முகாமையாளர் மெரீனா உமேஷா, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

முகநூலில் நாம்