

சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹ்மட்டுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் சுலைமான் அல் அமரிக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாவது.
சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால்,அடையக்கூடிய உச்சபட்ச ஆதாயங்களை அடையாளங்காணல் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படல், இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முறையான உதவிகள் இன்னும் ஆலோசனைகளை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்குதல் பற்றியே, இச்சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
நட்புறவு விஜயத்தை, மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள தொழில்வாய்ப்புக்களில் இலங்கையரை உள்வாங்குவது பற்றி கவனம் செலுத்துமாறும், ஐக்கிய அரபு இராச்சிய, அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் இலங்கையில் முதலிடுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்துமாறும் தூதுவரிடம் அமைச்சர் ஹாபிஸ் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பில், அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க, முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி டி.இஷட். சம்சுதீன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.