சுமார் 3,000 லீற்றர் டீசல் மீட்பு

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் அளவிலான 15 பெரல்  டீசல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில், வவுனியா பொலிஸ் விசேட பிரிவினர், நெளுக்குளம் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் இணைந்து இரும்பகம் ஒன்றில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது 15 பெரல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசலினை மீட்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்