
கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு
200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம்,
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்
நீல் பண்டார ஹபுஹின்ன உறுதிப்படுத்தினார்.
இந்த விழாவுக்குத் தேவையான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை திறைசேரி
ஏற்கனவே செய்துள்ளதாகவும், எனினும் மேற்படி நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான
செலவினங்களைக் குறைக்க அமைச்சு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு
வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.