
ஔடதங்களின் விலையைக் குறைப்பதுடன் சத்திரசிகிச்சை உபகரணங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான பொறிமுறையைத் தயாரிக்குமாறு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக கண் வில்லைகளுக்கான விலையைக் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 6000 ரூபாவிற்கு கண் வில்லைகளைக் கொள்வனவு செய்து, நோயாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண் வில்லைகளுக்கான விலை நிர்ணயிக்கப்படவுள்ளதோடு, கண் வில்லைகளை 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து 43 வகையான சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
