சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனை தெரிவித்துள்ளது.

வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில் நடமாடுவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் நேரடியாக கடும் சூரிய ஒளியின் தாக்கத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான சூரிய வெப்பம் காணப்படும் நேரத்தில் பாடசாலை மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

விசேடமாக சிறுநீரக நோய் உள்ளவர்கள் மற்றும் மருந்து வகைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவோர் இக் காலப்பகுதியில் தேக ஆரோக்கியம் தொடர்பில் தமது வைத்தியர்களை நாடுவது பொருத்தமானதாகும் சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்