சீரியல் நடிகை  ரேவதிப்ரியா செய்தி வாசிப்பாளர்.  

னைவியுடன் சென்னையில் புதுக்குடித்தனத்தைத் தொடங்கியிருக்கிறார், ‘செம்பருத்தி’ கதிர். ஊரடங்கு நாள்களில் இவரது திருமணம் நடந்தது. கோவிட் நிலைமை சரியானால் வரவேற்பை நடத்தலாமென நினைத்துக் கொண்டிருந்தவரின் வீட்டில் சில தினங்களுக்கு முன் அவரின் மனைவி சிந்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. மனைவிக்குப் பிடித்த வண்ணத்தில் தானும் உடையணிந்தபடி அந்தப் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.

“சினிமாவுக்குச் செல்லும் சீரியல் ஹீரோக்கள்னா ஒரு மாதிரியாகப் பார்க்கிறாங்களே, அதை மாத்தணும்னுதான் ‘ஆன்ட்டி ஹீரோ’வா அறிமுகமாகிறேன்’’ என்கிறார் ஸ்ரீ. பிரைம் டைமில் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிற சூழலில் சினிமா ஷூட்டிங்கையும் பேலன்ஸ் செய்வதில் சேனல் உதவுவதாகச் சொல்லியிருக்கிறதாம். சென்னை மற்றும் நாகர்கோவிலில் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கவிருக்கிறது, ஸ்ரீ ஹீரோவாக நடிக்கவிருக்கும் முதல் படத்தின் ஷூட்டிங்.

‘மெட்டி ஒலி’ சீரியலில் கடைசித் தங்கையாக நடித்த ரேவதிப்ரியா தற்போது தந்தி டிவியின் செய்தி வாசிப்பாளர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரும்பவும் சீரியல் வாய்ப்பு வந்துள்ளதாம். மறுபடியும் சீரியலில் நடிக்க அவருக்கும் ஆசைதானாம். சேனலில் அனுமதி கேட்டுக் காத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என பிசியாக இருந்தார் அமித் பார்கவ். ஊரடங்கு அமலாகி சீரியல்களின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதும் மகளுடன் பொழுதைச் செலவிட்டு வந்தார். இப்போது ஜீ தமிழ் சேனலில் புதிய சீரியலுக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த சீரியலுக்கான ஷூட்டிங் அடுத்த சில மாதங்களில் தொடங்கலாமெனத் தெரிகிறது. ‘லாக் டௌன் அமல்ல இருக்கிறப்ப பொறந்தா. குழந்தை கூடவே 24 மணி நேரமும் இருக்கிற சந்தர்ப்பம் பொதுவா அம்மாவுக்குத்தான் கிடைக்கும். இந்த அஞ்சாறு மாச லாக் டௌன் எனக்கு அந்த அனுபவத்தைத் தந்தது.

சீக்கிரமே அவளைப் பிரிஞ்சு ஷூட்டிங் போகணும்னு நினைக்கிறப்ப இன்னும் கொஞ்ச நாள் லாக்டௌன் நீடிச்சிருக்கலாமோனு கூட நினைக்கத் தோணுது’’ என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்