சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து அமெரிக்க ஜோ பைடன் நிர்வாகம் ஆராய்கின்றது

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும்இடையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பைடன் நிர்வாகம் இதுகுறித்து சிந்தித்து  வருகின்றது என விடயங்கள்குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதியிடமிருந்து முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவொன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் மத்தியில் பிரபலமான வீடியோ செயலியான டிக்டொக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயன்படுத்தப்படும் சிப்ஸ்கள் மீது மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

இதேவேளை சீனாவில் சிலவகை முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் அவை குறித்து தகவலை தெரிவிக்கவேண்டும் என்ற சட்டம் குறித்தும் பைடன் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுடன் ஆராய்ந்து வருகின்றது.

சீனாவில் முதலீடுகளை தடுக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அமைப்புமுறை குறித்தும் பைடன் நிர்வாகம் ஆராய்கின்றது.

ஜனாதிபதியின் உத்தரவு ஒரு பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாகயிருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் பைடன் செமிகன்டக்டர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்( 52 பில்லியன் அமெரிக்க டொலர்)

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு எதனை விற்பனை செய்கின்றன என்பது குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து அவதானித்து ஆராய்ந்து வருகின்றது.

சீனாவின் இலத்திரனியல் நிறுவனங்களும் நுகர்வோருமே அமெரிக்காவின் சிப்ஸ்களை அதிகளவு கொள்வனவு செய்கின்றனர்.

சீனாவிற்கான விற்பனையை இறுக்கமாகிவரும் அமெரிக்கா பாதுகாப்பு ஆபத்துக்கள் உள்ளன என தெரிவிக்கின்றது.

சில செயற்கை நுண்ணறிவு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய விதிமுறைகள் பல நூறு மில்லியன்டொலர் வருவாயை பாதிக்கலாம் என சிப்மேக்கர் தொவித்ததை தொடர்ந்து  என்விடியாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

செமிகண்டக்டர் தொழில்துறையிலிருந்து சீன நிறுவனங்களை முற்றாக கட்டுப்படுத்தும் கொள்கையை அமெரிக்கா பின்பற்றிவருகின்றது.

போன்ற நிறுவனங்களை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா இந்த நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானவை என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் சமீபத்தைய நடவடிக்கைகள் பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத்தின் பெரும் பகுதியை சீனா அணுகுவதை தடை செய்யும் கடும் நிலைப்பாட்டை பைடன் நிர்வாகம் பின்பற்றியுள்ளது என்பதை வெளிப்படு;த்தியுள்ளன.

பைடன் நிர்வாம் டிக்டொக் குறித்தும் ஆராய்ந்து வருகின்றது,சீன அரசாங்கம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தரவுகளை பெற்றுக்கொள்கின்றதா என்பது குறித்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்