சீனாவுடன் இணைந்து உயிரியல் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறோமா? – பாகிஸ்தான் பதில்!

சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக இன்றளவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை அந்நாட்டு மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் செய்தி நிறுவனம் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான 3 ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளது.

ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் , இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் கூறுகையில், இது அரசியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டது. முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்