
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட
உடன்படிக்கையினால் பல நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தியுள்ளன விஜேதாச
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே சர்வதேச நாணய நித்தியத்திடம் இருந்து கடனை
பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனறும் நீதி அமைச்சர் விஜேதாச
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட
பல நாடுகள் உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு விரும்பவில்லை என்றும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து தாம்
விமர்சித்தமையால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி
கிடைத்தாலும் அதனை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியாது
என தெரிவித்துள்ளார்.
ஆகவே சர்வதேச முதலீட்டாளர்களை வரவழைக்க இலங்கை மீதான நம்பிக்கையை
கட்டியெழுப்ப வேண்டும் என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.