சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்துக்கு எதிராக போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம்
சீனா’ என சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததை கண்டித்தும் சீனாவிற்கு
ஆதரவு தெரிவித்தும் ‘நவ ஜனதா பெரமுன’ அமைப்பினர்  கொழும்பிலுள்ள சீன
தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல
ராஜபக்சக்களின் நண்பன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நவ ஜனதா பெரமுன அமைப்பினர்
தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் நேற்று
நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்