சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடு இதுதான்! வெளியான தகவல்

சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா வைரஸ் பாதிக்கு உள்ளான நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் மட்டும் இதுவரை 175 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் 3,700 பேருடன் நங்கூரமிட்டிருக்கும் சொகுசு கப்பலில் 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் Yokohama துறைமுகத்தில் கடந்த 2 வாரங்களாக தீவிர கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டிருக்கும் பிரித்தானியாவின் Diamond Princess சொகுசு கப்பலானது ஹொங்ஹொங் பயணி ஒருவரால் கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

தற்போது இந்த கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 175 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்