“சீனாவுக்கான விமான சேவைகளை நிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்”

சீனாவுக்கான அனைத்து விமான பயணங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சீனாவில் தற்போது காணப்படும் நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பல சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் சீனாவுக்கான விமான பயணங்களை நிறுத்தியுள்ள நிலையிலும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சேவைகளை தொடர்ந்தும் நடத்தி வந்தது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் பின்னர் சந்தை நிலைமை ஆராய்ந்து, பெய்ஜிங், க்வான்சூ மற்றும் ஷெங்காய் நகரங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறிதது கவனம் செலுத்தப்படும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை இலங்கையில் சவுதி அரேபியாவின் ஜெத்தா வரையான விமான சேவைகளை நிறுத்தவும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சவுதி அரேபிய சிவில் விமான சேவைகள் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக வெளிநாட்டவர்கள் சவுதிக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்