
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 580 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஷாங்காய் நகரில் தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா தடுப்பு பணிகள் தற்போது மிகத் தீவிரமகாக அமல்படுத்தப்பட்டுள்ளன.